இரு மின்னூட்டங்களுக்கு இடைப்பட்ட
விசையானது கீழ்க்கண்டவற்றில் எதற்கு நேர்த்தகவில் உள்ளது?
அ) r ஆ) r-1 இ) r2 ஈ) r-2
விடை ஈ
ஒரு மெல்லிய லென்ஸின் குவியத் தொலைவு 25 செ.மீ. ஆனால் அதன் திறன்
அ) 4D ஆ) 0.04D இ) 0.4D ஈ) 2.5D
விடை அ
அழுத்தம் அதிகரிப்பதால் ஒரு திரவத்தின்
கொதிநிலை
அ) குறையும் ஆ) அதிகரிக்கும் இ) முதலில் அதிகரிக்கும் பிறகு குறையும் ஈ) முதலில் குறைந்து பிறகு அதிகரிக்கும்
விடை ஆ
சிமெண்ட் கட்டிகள் (திறன்கள்) என்பது
எந்தெந்தப் பொருட்களின் கலவை?
அ) கால்சியம் சல்பேட், கால்சியம் சிலிகேட், டிரை கால்சியம் அலுமினேட் ஆ) டை கால்சியம் சிலிகேட், டிரை கால்சியம் அலுமினேட்
இ) டை கால்சியம் சிலிகேட், டிரை கால்சியம் சிலிகேட் ஈ) டை கால்சியம் சிலிகேட், டிரை கால்சியம் சிலிகேட், டிரை கால்சியம்
அலுமினேட்
விடை ஈ
கீழ்வரும் அமிலங்களில் எது சிவப்பு
எறும்பின் கொடுக்கில் உள்ளது?
அ) லாக்டிக் அமிலம் ஆ) பியூட்ரிக் அமிலம் இ) அசிட்டிக் அமிலம் ஈ) பார்மிக் அமிலம்
விடை ஈ
40% பார்மால்டிஹைடு என்பது எவ்வாறு
அழைக்கப்படுகிறது?
அ) பார்மிக்கா ஆ) பார்மலின்
இ) பார்மிக் அமிலம் ஈ) ஆல்டிஹைடு
விடை ஆ
நியூட்ரானைக் கண்டறிந்தவர் யார்?
அ) ரூதர் ஃபோர்டு ஆ) கோல்ட் ஸ்டீன் இ) போர்பரி
ஈ) சாட்விக்
விடை ஈ
சோரை உடைய இலைகளுக்கு என்ன பெயர்?
அ) செதில் இலைகள் ஆ) ஸ்போரோபில்கள் இ) சிறு இலைகள் ஈ) கூட்டிலைகள்
விடை ஆ
நைட்ரஜனை நிலைப்படுத்தும்
பாக்டீரியாக்கள் எதன் வேர்களில் காணப்படுகிறது?
அ) புற்கள் ஆ) எலுமிச்சை இ) லெகுமினஸ் தாவரம் ஈ) வேப்ப மரம்
விடை இ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக