அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தும்
கழிகளாகப் பயன்படுத்தப்படுவது
அ) காட்மியம் ஆ) போரான்
இ) ஹேப்னியம் ஈ) இவை அனைத்தும்
விடை ஈ
சோடியம் கார்பனேட்டின் பயனைத்
தேர்ந்தெடு
அ) கடின நீரை மென்னீராக மாற்றப்
பயன்படுகிறது ஆ) தீயணைப்பானாகப்
பயன்படுகிறது இ) பீங்கான்
தொழிற்சாலையில் பயன்படுகிறது ஈ) தோல்
பதனிடுதலில் பயன்படுகிறது
விடை அ
என்சைம்கள் உதவியால் கரிம சேர்ம
மூலக்கூறுகள் சிறிய மூலக்கூறுகளாக மாறும் நிகழ்ச்சி
அ) நொதித்தல் ஆ) எஸ்டர் ஆக்குதல் இ) ஆக்ஸிஜனேற்றம் ஈ) ஹைட்ரஜன் நீக்குதல்
விடை அ
ஹேபர் முறையில் அம்மோனியா
தயாரித்தலில் பயன்படுத்தப்படும் வினையூக்கி
அ) காப்பர் ஆ) இரும்பு
இ) கோபால்ட் ஈ) அம்மோனியம் குளோரைடு
விடை ஆ
குளுக்கோஸை எத்தில் ஆல்கஹாலாக மாற்றப்
பயன்படும் என்ஸைம் எது?
அ) டயஸ்டேஸ் ஆ) இன்வர்டேஸ் இ) சைமேஸ்
ஈ) மால்டேஸ்
விடை இ
கொழுப்பு அமிலங்களின் சோடியம் உப்பு
என்பது
அ) கடின சோப்பு ஆ) மென் சோப்பு இ) குளியல் சோப்பு ஈ) முகசவர சோப்பு
விடை அ
ஒரு சிறந்த பூஞ்சைக் கொல்லியாகப்
பயன்படுவது
அ) கார்பன் ஆ) கார்பன் டெட்ரா குளோரைடு இ) சல்பர்
ஈ) காப்பர்
விடை ஆ
பாலில் காணப்படும் கார்போஹைட்ரேட்
அ) சுக்ரோஸ் ஆ) குளுக்கோஸ் இ) லேக்டோஸ்
ஈ) ஃப்ரக்டோஸ்
விடை இ
அணுக்கரு உலையின் வெடிப்பினால் பெருத்த
சேதம் ஏற்பட்ட இடம்
அ) செர்னோபில் ஆ) ஹிரோஷிமா
இ) டிராம்பே ஈ) கல்பாக்கம்
விடை அ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக