குரோமோசோம்களின் எண்ணிக்கையை ஓர் உயிரினத்தில் நிலைநிறுத்துகிற செல் பகுப்பு வகை
அ) மைட்டாசிஸ் ஆ) ஏமைட்டாசிஸ் இ) மயோசிஸ் ஈ) இவை அனைத்தும்
விடை இ
வாஸ்குலார் கிரிப்டோகேம்கள் எனப்படுவது
அ) பிரையோபைட்டுகள் ஆ) பூஞ்சைகள் இ) பாசிகள் ஈ) டெரிடோபைட்டுகள்
விடை ஈ
ஈஸ்ட்டுகள் நொதித்தல் செயலை மேற்கொள்ளத் தேவைப்படும் மூலப்பொருள்
அ) சர்க்கரை மற்றும் கனிச்சாறு ஆ) சர்க்கரை இ) ஆல்கஹால் ஈ) சாக்கரின்
விடை ஆ
செயற்கைப் பட்டு எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
அ) புளோயம் நார்கள் ஆ) மரக்கூழ் இ) செயற்கை இழைகள் ஈ) செம்மறி ஆட்டு முடி
விடை இ
பட்டுப்பூச்சி வளர்ப்பில் பயன்படும் தாவரம் எது?
அ) யூகலிப்டஸ் ஆ) சின்கோனா இ) முசுக்கட்டை ஈ) மக்காச்சோளம்
விடை இ
கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத இணை எது?
அ) ஸ்போர் - இனப்பெருக்கம்
ஆ) வெஸ்ஸல் - சர்க்கரை கடத்தப்படுதல்
இ) இலைத்துளை - நீராவிப்போக்கு
ஈ) ஒளிச்சேர்க்கை - ஆக்ஸிஜன் வெளியேற்றம்
விடை ஆ
கீழ்க்கண்டவற்றுள் எது மங்கையர் கூந்தல் பெரணி என அழைக்கப்படுகின்றது?
அ) பாலிட்ரைக்கம் ஆ) நீடம் இ) பைனஸ் ஈ) அடியாந்தம்
விடை ஈ
ஒரு தாவர செல், விலங்கு செல்லிலிருந்து எதில் மாறுபடுகின்றது?
அ) மைட்டோகாண்டிரியன் ஆ) செல் சுவர் இ) செல் சவ்வு ஈ) உட்கரு
விடை இ
ஸ்போராபைட் எதிலிருந்து வளர்ச்சியடைகின்றது?
அ) ஸ்போர் தாய் செல் ஆ) கொனிடியம் இ) சைகோட் ஈ) கேமீட்
விடை இ
புவியீர்ப்பு நாட்டத்தைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் கருவி
அ) ஆக்சானோ மீட்டர் ஆ) கிளினோஸ்டாட் இ) ஆல்டி மீட்டர் ஈ) போட்டோ மீட்டர்
விடை ஆ
கல்லீரலில் சுரக்கப்படுவது
அ) பித்த நீர் ஆ) இன்சுலின் இ) எச்.சி.ஐ. ஈ) கணைய நீர்
விடை அ
இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாகும் இடம்
அ) கல்லீரல் ஆ) மண்ணீரல் இ) எலும்பு மஜ்ஜை ஈ) கணையம்
விடை இ
எய்ட்ஸ் நோய்க்குக் காரணமாக இருப்பவை
அ) பாக்டீரியங்கள் ஆ) எச்.ஐ.வி. வைரஸ் இ) ஈ ஈ) கொசு
விடை ஆ
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
அ) விசையின் திருப்புதிறன் - வாட்
ஆ) வேலை - ஜுல் / வினாடி
இ) திறன் - நியூட்டன் / மீட்டர்
ஈ) விசையின் அலகு - நியூட்டன்
விடை ஈ
சாலையில் செல்லும் காரின்மீது மழை செங்குத்தாக விழுகின்றது. அம்மழைத்துளிகள்
அ) முன் கண்ணாடி மீது மட்டும் விழும் ஆ) பின் கண்ணாடி மீது மட்டும் விழும் இ) இரு கண்ணாடிகளின் மீதும் விழும் ஈ) எந்தக் கண்ணாடியின் மீதும் விழாது
விடை ஈ
ஒரு திரவத்தில் மூழ்கடிக்கப்பட்ட பொருள், அது வெளியேற்றிய திரவத்தின் எடைக்கேற்ற மேல்நோக்கு விசையை உணரும். இது
அ) நியூட்டனின் இயக்க விதி ஆ) ட்யூலங் மற்றும் பெட்டிட் விதி இ) மதிப்பு விதி ஈ) ஆர்க்கிமிடீஸ் தத்துவம்
விடை ஈ
வாகனங்களில் நீரியல் நிறுத்திகளின் தத்துவம்
அ) பெர்னௌலியின் தத்துவம் ஆ) பாய்ஸ்சூலியின் தத்துவம் இ) பாஸ்கலின் தத்துவம் ஈ) ஆர்க்கிமிடீஸின் தத்துவம்
விடை இ
ஒரு லென்ஸின் திறன் +1 டயாப்டர் எனில், அதனுடைய குவிய தூரம்
அ) 1 செ.மீ. ஆ) 10 செ.மீ. இ) 100 செ.மீ. ஈ) 1000 செ.மீ.
விடை இ
நீரின் அடர்த்தி ............... வெப்பநிலையில் பெருமமாகும்
அ) 0 டிகிரி செல்சியஸ் ஆ) 4 டிகிரி செல்சியஸ் இ) 100 டிகிரி செல்சியஸ் ஈ) -10 டிகிரி செல்சியஸ்
விடை ஈ
நிலைமாற்றத்தின்போது வெப்பநிலை
அ) உயர்கிறது ஆ) குறைகிறது இ) மாறாது அமைகிறது ஈ) உயரலாம் அல்லது குறையலாம்
விடை இ
கடலின் ஆழத்தைக் கண்டறியப் பயன்படும் கருவி
அ) ரேடார் ஆ) ஃபேதோ மீட்டர் இ) சோனார் ஈ) மிதவைமானி
விடை ஆ
சலவைத்தூள் அதிகமாக உபயோகப்படுத்தப்படுவது
அ) குளோரின் வாயு தயாரிக்க ஆ) ஹைட்ரோகுளோரிக் அமிலம் தயாரிக்க இ) சோடியம் பை சல்பைட்டு தயாரிக்க ஈ) நீரைத் தூய்மைப்படுத்த
விடை ஈ
நியூட்ரானைக் கண்டுபிடித்தவர்
அ) ஜே.ஜே. தாம்ஸன் ஆ) கோல்டுஸ்டீன் இ) நீல்ஸ்போர் ஈ) சாட்விக்
விடை ஈ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக